Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் , இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படத்தில் மலையாள திரையுலகத்தில் புகழ்பெற்ற வினித் சீனிவாசன், ஒரு பாடலை பாடியுள்ளார்.
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் , இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படத்தில் மலையாள திரையுலகத்தில் புகழ்பெற்ற வினித் சீனிவாசன், ஒரு பாடலை பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் சிறப்பான படைப்புகளை, தயாரித்து வரும் Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில், பிக்பாஸ் முகேன் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “இடிமுழக்கம்” திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் புதுமையான ஒரு திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. NR.ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மலையாளத் திரையுலகில் பெரும் புகழை குவித்த, வினித் சீனிவாசன் அவர்கள் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
Skyman Films International தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறும்போது ...
எங்கள் நிறுவனத்தின் சார்பில் முகேன் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த பெருமை மிகு படைப்பான “இடிமுழக்கம்” திரைப்படம் அழகாக உருவாகி வருவது மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லரை படத்தை இயக்குகிறார். இப்படம் ஆரம்ப நொடியிலிருந்து இறுதிவரை, எதிர்பாரா திருப்பங்களுடன், ஒரு பரபரபான திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் படைப்பாக இருக்கும். மலையாளத் திரையுலகில் பெரும் புகழை குவித்திருக்கும், பன்முக திறமை கொண்ட வினித் சீனிவாசன் அவர்கள் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது...
இசையமைப்பாளர் NR ரகுநந்தன் இசையில், இப்பாடலின் ட்யூனை கேட்ட பிறகு, வினித் சீனிவாசன் அவர்களின் குரல் இப்பாடலுக்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. அவரிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புக்கொண்டார். அவரது அபாரமான திரைப்பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் அவரின் மீதும், அவரின் படைப்புகள் மீதும் மிகப்பெரும் மரியாதை கொண்டுள்ளேன். அவரைச் சந்தித்தபோது எனது படைப்புகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவை தனக்கு மிகவும் பிடிக்குமென்றும் கூறி என்னை ஆச்சர்யப்படுத்தினார். இப்பாடலை உடனடியாக ஒப்புக்கொண்டு அருமையான முறையில் பாடித்தந்தார். அவரது குரலில் இப்பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என்றார்.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்திரி நடிக்கிறார் மேலும் சரண்யா பொன்வண்ணன், MS பாஸ்கர் அருள்தாஸ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.