படம் இயக்குவது சுலபம் ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை " பார்கவி " படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் V.ராஜா
படம் இயக்குவது சுலபம் ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை
" பார்கவி " படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் V.ராஜா
புதுமுகங்களை வைத்து " பார்கவி " என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் " அருவா சண்ட " படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான v.ராஜா.
கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை " மக்கள் செல்வன் விஜய் சேதுபதி " வெளியிட்டார் சினிமா கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பும் அதன் தோற்றமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தை பற்றி இயக்குனரும், தயாரிப்பாளருமான V.ராஜா கூறியதாவது....
ஒரு படத்தை இயக்குவது பெரிய வேலை இல்லை. படத்தை தயாரிப்பது தான் கலைத்துறையில் கடினமான விஷயம் எனவே தயாரிப்பை விட சுலபமானது தான் இந்த இயக்குனர் வேலை. வாழ்க்கைக்கே ஆபத்தான தொழில் சினிமா தயாரிப்பு தொழில் தான், இயக்குனர் மட்டும் அல்லாமல் பல கலைஞர்களை உருவாக்கி அவர்களுக்கு வசதியான வாழ்வியலை உருவாக்கி கொடுத்த பல தயாரிப்பாளர்கள் நிலமை இன்று கேள்விக்குறியாக உள்ளது. எனவே எனது படைப்பான " பார்கவி " படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதி இயக்குகிறேன்.
" பார்கவி " படம் வரலாற்று படமாகும், பிரமாண்டமான படத்தை எனது அனுபவத்தையும் எனக்கு உறுதுணையாக மிக அனுபவம் வாய்ந்த இயக்குனர் பாண்டி செல்வா மற்றும் ராஜி கோபி இருவரையும் இணை இயக்குனர்களாகவும், படத்தின் பலமாக அருவா சண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்பாண்டியும் உடன் இருக்க குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுமட்டும் அல்லாது தேசிய விருது பெற்ற எடிட்டர் V J சாபு ஜோசப் இருக்கிறார். இந்த படத்தில் அனைத்து டெக்னீசியன்களும் மிகவும் அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெறிந்தவர்கள், எனவே படம் வெற்றி படமாக அமைவது உறுதி.
படத்தின் கதாநாயகன் முகேஷ் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர் இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
கதை, திரைக்கதை, இயக்கம் - v ராஜா
கதாநாயகன் - முகேஷ்
கதாநாயகி - ஸ்ரேயா
ஒளிப்பதிவு - சந்தோஷ் பாண்டி
இணை இயக்குனர்கள் - பாண்டி செல்வா & ராஜி கோபி
எடிட்டர் - V J சாபு ஜோசப்
நடனம் - ராதிகா
உடைகள் - அமல்ராஜ்
புகைப்படம் - stills விஜய் மணி
மக்கள் தொடர்பு - மணவை புவன்
டிசைன்ஸ் - சிந்து கிராபிக்ஸ்
இணை தயாரிப்பு - முகேஷ் குமார்
தயாரிப்பு - v ராஜா
தயாரிப்பு நிறுவனம் - ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்