பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 
பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

பவுடர் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. 

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இவ்விழாவினில் 

இயக்குநர் - திரைக்கதை எழுத்தாளர் - நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வசந்த் பேசுகையில், “நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்."

இயக்குநர் எழில் பேசுகையில், 
“எனக்கு நிகிலை அவர் பிஆர்ஓ ஆவதற்கு முன்பே தெரியும். எங்கள் நட்பு 23 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆடியோ மற்றும் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளின் போது ஒரு பிஆர்ஓ-வாகவும், இப்போது பெரிய திரைகளில் நடிகராகவும் தனது வீரியத்தை காட்ட இருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்."

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், “நிகில் ஒரு இயல்பான நடிகர் என்பது இந்தப் படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. நிகில் தனது தொழிலில் அயராத அர்ப்பணிப்பை கொடுத்து, சரியான நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஒரு வெற்றிகரமான நடிகராக அவர் பல மைல்கள் பயணிக்க உள்ளார், அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”

இயக்குனர் சசி பேசுகையில், "நிகில் எப்போதும் உற்சாகம் தரும் நபர், இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க வாழ்த்துகிறேன்."

இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “சசி சார் சொன்னது போல் நிகில் சார் ஒரு உற்சாகமிக்க நபர். அவர் எப்பொழுதும் கடின உழைப்பு கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவர் நடிகராகி, வெற்றியைக் காணப்போகிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீ ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் என்பதும், இந்த படத்தில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பணியை செய்திருப்பதும் டிரெய்லரில் தெரிகிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்."

எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில், “நேர்த்தியான காட்சிகளும், மேக்கிங் ஸ்டைலும் டிரெய்லரில் நமக்கு தெரிகிறது, எல்லாமே மிகச் சரியாகவும், தொழில் ரீதியாகவும் அமைந்துள்ளது. விஜய் ஸ்ரீ நிச்சயம் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநராக வருவார். இசை அமைப்பாளரின் இசையில் ஒலியின் தரம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாகவும், பழக்கமான முகங்களாகவும் இருக்கிறார்கள், படக்குழுவின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும். நிகில் முருகன் இந்தப் படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக நல்ல பெயரைப் பெறுவார். அவர் நடிப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது. ஒட்டுமொத்த அணியும் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்றார். 

தயாரிப்பாளர் சமீர், “எனக்கு நிகில் சாரை பத்தாண்டுகளுக்கு மேல் தெரியும். கமல் சார் மூலம்தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் தொடர்ந்து ஆடைகளை மாற்றுவதில் பெயர் பெற்றவர், ஆனால் நட்பை அவர் மாற்றுவதில்லை. இந்தப் படம் வெற்றிபெற அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “நடிகராக நிகிலின் வளர்ச்சி கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உத்வேகமும், ஒருங்கிணைப்பும் கொண்ட கடின உழைப்பாளி. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”.

தயாரிப்பாளரும் இயக்குநருமான CV குமார் பேசுகையில், “நிகில் முருகன் என்னுடைய நெருங்கிய நண்பர், அவர் எனது படங்களுக்கு பிஆர்ஓவாக இருந்துள்ளார். அவரது அதிக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவரை எனக்கு பிடிக்கும். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

அஜயன் பாலா பேசுகையில், “அனைத்து படங்களுக்கும் சுறுசுறுப்புடன் கூடிய உழைப்பை கொடுக்கும் கடின உழைப்பாளி தான் நிகில். பல படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர். அவரது நேர்மையும் கடின உழைப்பும் அவருக்கு இன்று தமிழ் சினிமாவில் நடிகர் என்ற இந்த அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளது. ‘பவுடர்’ என்ற தலைப்புக்கு நிறைய முக்கியத்துவமும், மதிப்பும் உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்."


பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், “நிகில் முருகன் நடிகராக வளர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குநர் விஜய்யை பாராடியாக வேண்டும். இசையமைப்பாளரின் பணி பாராட்டத்தக்கது, இது அவரது முதல் படம் போல் இல்லை. முதல் படத்திலேயே நிகில் போலீஸ் சீருடை அணிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார். 

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி பேசுகையில், 
“நான் முதல்முறையாக சந்தித்ததில் இருந்தே நிகில் சார் ஒரு சிறந்த நலம் விரும்பியாக இருந்து வருகிறார். விஜய் ஸ்ரீ ஜி உடனான எனது பயணம் தாதா 87ல் இருந்து, இன்னும் பல படங்களில் தொடரும். இந்தப் படத்தின் இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் சிறப்பான பணியினை செய்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” 
என்றார். 

நடிகர் ரோபோ ஷங்கர் பேசுகையில், “நிகில் முருகனுக்கு அபாரமான கமாண்டிங் பவர் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட 16 வயதினிலே திரைப்படத்தின் டிஜிட்டல் ரீ-ரிலீஸ் உட்பட பல நிகழ்வுகளில் நான் அதைப் பார்த்திருக்கிறேன். நிகில் அவர்கள் மொத்த கூட்டத்தையும் இயக்குவதை நான் பார்த்தேன். எனவே நடிகராகவும் சிறப்பாக பணியாற்றியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார். 

ஒளிப்பதிவாளர் ராஜா பேசுகையில்..
இப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நிகில் சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

 நடிகர் வையாபுரி பேசுகையில், “இந்தப் படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு ரீ-என்ட்ரி போன்றது, இந்த வாய்ப்பை வழங்கிய நிகிலுக்கு நன்றி. அவர் எனக்கு காட்பாதர் போன்றவர், இந்த வாய்ப்பால் எனக்கு தற்போது அதிக வாய்ப்புகள் கிடைத்து தற்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். நான் 400 படங்களில் நடித்திருக்கிறேன், பவர் போன்ற எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை."

நடிகர் பார்த்திபன் அனுப்பிய குரல் குறிப்பில், “பிஆர்ஓவாக ஷோஸ்டாப்பராக இருந்த நிகில் முருகன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர். இந்தப் படத்தின் மூலம் நடிகராக அனைவரின் மனதையும் வெல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். திரையுலகில் உள்ள அனைத்து துறைகளையும் பற்றி அவருக்கு நல்ல அறிவு இருக்கிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த டீமையும் வாழ்த்துகிறேன்."

நடிகர் ஆதவன் பேசுகையில், “நான் பல முன்னணி நடிகர்களுக்கு மிமிக்ரி செய்துள்ளேன், ஆனால் எனது மிமிக்ரிக்கு பிறகு ஒருவர் நடிகராக வருவது இதுவே முதல் முறை. அவரது கடின உழைப்பு இன்று அவருக்கு தொழில்துறையில் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுத்தந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை அனித்ரா நாயர் பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த நிகில் சார், தயாரிப்பாளர்கள், விஜய் ஸ்ரீ ஜி சாருக்கு நன்றி. நல்ல கதை கொண்ட திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வித்தியாசமான கதையில் உருவாகும் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்துக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார். 

தயாரிப்பாளர் மோகன்ராஜ் பேசுகையில், “நல்ல நகைச்சுவை கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படம். இதன் முதல் பிரதியை பார்த்தேன், ஒவ்வொரு ஷாட்டும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரித்து வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி பேசுகையில், “படம் முழுவதும் தயாரிப்பாளர் மோகன் சார் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். நிகில் சார் மிகச்சிறப்பான பணி செய்திருக்கிறார். ஒரு இரவு பின்னணியில் கதை என்பதால் முழு திரைப்படமும் இரவில் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய வகையில் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, கொரோனா காலத்தில் இரவு ஊரடங்கு இருந்ததால் படப்பிடிப்பு கெட்டுப்போனது. பலத்த சவால்களுக்கு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படக்குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

கூல் சுரேஷ் பேசுகையில், "இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தியேட்டர்கள் கைதட்டல், விசில், பாராட்டுகள் என நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். நிகில் ஒரு அதீத ஆற்றல் மிக்க நபர், அவருடைய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இந்தப் படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தப் போகிறது. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்றார். 

நடிகர் நிகில் முருகன் பேசுகையில், “எனக்கு வழிகாட்டிய முன்னோடிகள், எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. என் தாய், தந்தை, மனைவிக்கு நன்றி. இதுவரை நான் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் நடிகராக வருவது இதுவே முதல் முறை. சிறப்பான கதை உள்ளடக்கம் கொண்ட ஒரு நல்ல திரைப்படத்துடன் நாங்கள் வந்துள்ளோம். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுடன் கூடிய விரைவில் உங்களை பெரிய திரையில் சந்திப்போம் நன்றி."

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் தொழில் நுட்ப குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - விஜய் ஸ்ரீ ஜி

இசை - லியாண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு - ராஜபாண்டி

மக்கள் தொடர்பு - நிகில் முருகன்

படத்தொகுப்பு - குணா

கலை இயக்குநர் - சரவணா

சண்டைக்காட்சி - விஜய்

உடைகள் - வேலவன்

புகைப்படங்கள் - ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ - சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு - பிரேம்குமார்

ஒலிக்கலவை - நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு - ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் - சரவணன்

தயாரிப்பு நிறுவனம் - ஜி மீடியா

தயாரிப்பாளர் - ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் - டிவோ