’போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி
’போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

மருத்துவக் கல்லூரியின் மூத்த மாணவர் அர்ஜூன் தாஸ் மீது, இளைய மாணவர் காளிதாஸ் ஜெயராமுக்கு தனிப்பட்ட பகை இருக்குது. இதனால் அர்ஜூன் தாஸ் ஆட்களை காளிதாஸ் சீண்டுவோதோடு, அதை கல்லூரி மோதலாகவும் மாற்ற முயற்சிக்கிறார். இதையெல்லாம் புரிச்சிக்கிட்ட அர்ஜூன் தாஸ், பொருத்து பொருத்து, ஒரு கட்டத்தில் பொருத்தது போதும்ன்னு பொங்கி எழுவது தான் ’போர்’.

இதுக்கு நடுவில அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் பெண் மீது சாதி வன்கொடுமை நடக்குது. இப்படி அர்ஜூன் தாஸ், காளிதாஸ் மற்றும் அரசியல் தலைவரின் மகள் என மூன்று பக்கம் நடக்கும் மோதலால் கல்லூரியில் மிகப்பெரிய போர் வெடிக்க அதனால் யார் யாருக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.

அர்ஜூன் தாஸ் வசனம் பேசும்போது குரல் மூலம் மிரட்டியிருக்கார். அவர் அந்த நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை எடுத்தால் என்ன நடக்குமோ என்ற எதிர்ப்பார்ப்போடு, ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கிறார். அது மட்டுமில்ல படம் முழுக்க அவர் நடிப்பிலேயே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கார்.

இளைய மாணவராக நடிச்ச காளிதாஸ் ஜெயராம் முரட்டுத்தனமான தோற்றத்துடன், முரட்டுத்தனமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கார்.

நாயகிகளாக நடிச்ச டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன் ரெண்டு பேரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செஞ்சிருக்காங்க.

அம்ருதா ஸ்ரீனிவாசன், மெர்வின் ரோசரியோ, ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் அளவுக்கு நடிச்சிருக்காங்க.

ஒளிப்பதிவு சென்ஞ்ச ஜிஷ்மி காளித், பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோர் படத்தை பிரமாண்டமா படமாக்கியிருக்காங்க.

இசையமைச்ச சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத்,  கவுரவ் காட்கிண்டி இசையில் பாடல்கள் நல்லா அமைச்சிருக்காங்க. பின்னணி இசையும் அருமையா இருக்குது.

படத்தை பத்தி சொல்லனும்னா, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சமூக கலாச்சாரம் இருக்கும். ஆன இந்த படத்தில் அது இல்லை. தமிழ் கலாச்சாரத்துப் பெண்கள் தண்ணியடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் ஏத்துக்கொள்ள முடியவில்லை.

அடுத்து ரெண்டு கதாநாயகர்களுக்கு இடையே நடக்கும் மோதலே போதும், அரசியல்வாதி, அவருடைய மகள் மோதல் இதெல்லாம் தேவையா? என்று தோனுது.

பத்துல தேவையில்லாத காட்சிகள் நிறைய இருக்குது. அது எல்லாம் நீக்கினால் தமிழில் நிச்சயம் இது வெற்றி படமா இருக்கும். 

மொத்தத்தில், படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் வெற்றி படமா தருவதற்கு முயற்ச்சி செஞ்சிருக்கார். தமிழ் மொழிக்கு ஏத்த மாதிரி கொடுத்தா இது வெற்றி படம் தான்.