விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-29ல் ரிலீஸ்

விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’ ; நவ-29ல் ரிலீஸ் 

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக  நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன்,  அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஷே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார். 

வரும் நவ-29ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதுகுறித்து இயக்குநர் J சபரிஷ் கூறும்போது, “விவசாயத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல ஜாம்பவான் இயக்குனர்கள் படம் பார்த்துவிட்டு படத்தை சிலாகித்து பாரட்டினார்கள். விவசாயம் அழிந்துகொண்டு வரும் இந்த காலகட்டத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்படி ஒரு படம் வருகிறது. விவசாயத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள பாடகர் வேல்முருகன் பாடியுள்ள ‘கொண்டாட்டம் கும்மாளம் சந்தோஷமே’ என்கிற பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்ற ஆதரவு படத்திற்கும் மக்களிடம் இருந்து கிடைக்கும் என நம்புகிறோம்” என்கிறார்.  

நடிகர்கள்

சூப்பர்குட் சுப்பிரமணி, பழ. கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன்,  அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது மற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ;  இன்ஃபினிட் பிக்சர்ஸ்

இயக்கம் ; J சபரிஷ்

கதை ; இதயநிலவன்

இசை ; தமீம் அன்சாரி

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

படத்தொகுப்பு ; J சபரிஷ்

பாடகர்கள் ; வேல்முருகன், முகேஷ் 

மக்கள் தொடர்பு ; A.ஜான்