ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K. கனிஷ்க், GK. G. மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்ட்'

நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் மூலம் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இப்போது 'ரெய்ட்' படத்துடன் வருகிறார். 

தயாரிப்பாளர் S.K. கனிஷ்க் & GK. G. மணிகண்ணன் பேசியதாவது, "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.

இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு சார் மிகச்சரியாக பொருந்திப் போவார் என முடிவு செய்தோம். அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்" என்றார். 

விக்ரம் பிரபு, ஸ்ரீவித்யா & அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

வசனம்: இயக்குநர் முத்தையா,
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கதிரவன்,
படத்தொகுப்பு: மணிமாறன்,
கலை: வீரமணி கணேசன்,
நடனம்: பாபா பாஸ்கர்,
ஆக்‌ஷன்: கே. கணேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: மாலினி பிரியா,
ஒப்பனை: வி. சேகர்,
VFX: G.E. அசோக் குமார்,
SFX: சேது,
DI கலரிஸ்ட்: சிவசங்கர்.V,
மிக்ஸிங்: T. உதயகுமார்,
எக்ஸிகியூட்டிவ் புரொடக்சன்: தம்பி M. பூபதி