கும்பாரி' திரைப்பட விமர்சனம் விமர்சிப்பவர் ChennaiPatrika.சிவாஜி

கும்பாரி' திரைப்பட விமர்சனம் விமர்சிப்பவர் ChennaiPatrika.சிவாஜி

கும்பாரி' திரைப்பட விமர்சனம்

விமர்சிப்பவர் ChennaiPatrika.சிவாஜி

 

பெற்றோர் இல்லாத விஜய் விஷ்வா மற்றும் நல்ப் ஜியா, சிறு வயது முதல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இரந்து ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். விஜய் விஷ்வா மீது நாயகி மஹானாவுக்கு காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய வர. அவர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, விஜய் விஷ்வாவை மிரட்டுகிறார். நண்பனை மிரட்டும் ஜான் விஜயை எதிர்க்கம் நல்ப் ஜியா, விஜய் விஷ்வா மற்றம் மஹானாவுக்கு திருமணம் செய்து வைப்பேன் நான் உயிருடன் இருக்கும் வரை அதை யாராலும் தடுக்க முடியாது என்று சவால் விடுகிறார்.

 

அதன்படி, நண்பனின் திருமண ஏற்பாடுகளை நல்ப் ஜியா கவனிக்க, மறுபக்கம் தங்கையை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முயற்சியில் ஜான் விஜய் ஈடுபடுகிறார். இதற்கிடையே, நல்ப் ஜியா திடீரென்று காணாமல் போகிறார். அவரை ஜான் விஜய் தான் கொலை செய்திருப்பார். என்று நினைத்து விஜய் விஷ்வா நீதிமன்றத்தில் முறையிடுகிறார். ஆனால், நல்ப் ஜியா காணாமல் போனதற்கு ஜான் விஜய் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது.

 

நல்ப் ஜியா என்ன ஆனார்? அவர் சொன்னது போல் நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா? இல்லையா? என்பது தான் கும்பாரி படத்தின் கதை

 

படத்தில் சில காட்சிகளில் வசனம் கைதட்டல் பெறுகிறது. பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி. காதல் சுகுமார் என அனுபவம் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை. எழுதி இயக்கியிருக்கம் கெவின் ஜோசப், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

மொத்தத்தில் 'கும்பாரி' படம் சுமார் ரகம்.