காஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்

காஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்

தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்டுள்ள ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார், இதன் பின் வீட்டில் சில அமானுஷ்ய சக்தி நடமாடுவதை அனைவரும் உணர்கிறார்கள், அந்த ஊரில் உள்ள அகோரி கூறியது போல வீட்டில் சில சோதனைகளை செய்கிறார்கள் அப்போது வீட்டில் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிறது, அதுவும் வீட்டில் இரண்டு பேய்கள் இருக்கிறது.  

ஒருகட்டத்தில் அந்த பேய் நாயகன் லாரன்சின் உடம்பில் புகுந்து விடுகிறது, லாரன்ஸ் உடம்பில் புகுந்த பேயின் முன்கதை என்ன? அது யாரை பழிவாங்க துடிக்கிறது? என்பதே மீதிக்கதை

படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் கலக்கியுள்ளார், குறிப்பாக காளி கதாபத்திரத்தில் வரும் ராகவா லாரன்ஸ் மாஸ் காட்டியுள்ளார், கோவை சரளா - தேவதர்ஷினி - ஸ்ரீமன் ஆகியோரது காமெடி இதிலும் நன்றாகவே வொர்க்அவுட் ஆகியுள்ளது. படத்தில் திகிலையும், காமெடியையும் சரி விகிதமாக கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ், குறிப்பாக பிளாஷ் பேக்கில் வரும் கதை நன்றாகவே அமைத்துள்ளது, வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோர் லாரன்ஸின் முறை பெண்களாக நடித்துள்ளனர், பின்னணி இசையில் தமன் பட்டையை கிளப்பியுள்ளார்.

மொத்தத்தில் குடும்பத்துடன் உற்சாகமாக கண்டுகளிக்கும் படியாக "காஞ்சனா 3" திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.......