நான் சிவப்பு மனிதன்' பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் 'நான் கடவுள் இல்லை'

நான் சிவப்பு மனிதன்' பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் 'நான் கடவுள் இல்லை'

வித்தியாசமான திரில்லர் படம்!

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம்.

இப்படத்தை       ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்   எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார்.

 சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, 
ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மகேஷ் K தேவ்,
இசை    சித்தார்த் விபின்,
எடிட்டிங் பிரபாகர். கலை வனராஜ்.

இப்படத்தில் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். அவரது பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல்  புதுமையாக அதிரடியாக  இருக்கும். அவரது மனைவியாக  இனியாவும் மகளாக டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

அழுத்தமான வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை  கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் .அந்தக் காலத்தில் 'நான் சிவப்பு மனிதன்' என்ற பரபரப்பான படம் இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இந்த 'நான் கடவுள் இல்லை' படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படத்தின் ஆடியோ விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று 5 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.