‘ஹிட்லர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘ஹிட்லர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
‘ஹிட்லர்’ பட விமர்சனம் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவானி

‘ஹிட்லர்’ பட விமர்சனம் விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவானி

வேலைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ரயில் நிலையத்தில் நாயகி ரியா சுமனை கண்டதும் காதல் கொள்கிறார். இவர்களது காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் ரூ.400 கோடியை எடுத்துச் செல்லும் அவரது ஆட்களை கொலை செய்துவிட்டு அந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை அதிகாரி கெளதம் மேனனுக்கு வழங்கப்பட, அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன?  என்பது தான் ‘ஹிட்லர்’.

வழக்கமான தனது பாணியை மற்றும் விதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, இதில் ஆக்‌ஷனை கடந்து காதலிலும் பட்டய கிளப்பியிருக்கிறார். அதே அளவான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்பவர், ரொமான்ஸ் காட்சிகளில் அடக்கி வாசித்திருந்தாலும், அட்ரா சக்கை ரகத்தில் காதலித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமனுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் மேனன், தனது வழக்கமான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதை ஓட்டத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.ஐ, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கிய விதம் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்சார ரயிலில் காதல் பயணத்தை காட்சிப்படுத்திய விதம் மணிரத்னம் ரசிகர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.

விவேக் - மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மசாலாத்தனம் நிறைந்ததாக இருக்கிறது.

வழக்கமான கமர்ஷியல் ஆக்‌ஷன் கதை என்றாலும் தன்னால் முடிந்தவரை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சங்கத்தமிழன்.இ.

மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் தனா. எஸ்.ஏ, விஜய் ஆண்டனியை வேறு மாதிரியாக காட்டியிருப்பதோடு, ஏற்கனவே வெளியான படங்களின் சாயலில் கதை இருந்தாலும் தனது யுக்தியால் படத்தை வேறு மாதிரியாக நகர்த்தி ரசிகர்களை எண்டர்டெயின் செய்கிறார்.

முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதை சமூக அக்கறையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் தனா.எஸ்.ஏ அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.