துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!!

துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!!
துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!!
துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!!

துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் !!!

செப்டம்பர் 29 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது - “கிங் ஆஃப் கொத்தா” புதிய அரசனின் அசுர  எழுச்சியைக் கண்டுகளியுங்கள்!!! 

"கிங் ஆஃப் கொத்தா”  - செப்டம்பர் 29, 2023 முதல்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  ஸ்ட்ரீமிங் ஆகிறது, ஒரு புதிய உலகத்தில் புதிய அனுபவத்தைப் பெற்று மகிழுங்கள். இந்த பரபரப்பான க்ரைம் டிராமாவை இயக்குநர்  அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார் மற்றும் அபிலாஷ் N சந்திரன் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க,  பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“கிங் ஆஃப் கொத்தா” உலகில்  அடியெடுத்து வைக்கும்  ராஜு என்ற இளைஞனின் பயணமும்,  கேங்ஸ்டர் உலகில் அவன் ஏற்படுத்தும் மாற்றமும் தான் இந்தப்படத்தின் கதை.  ராஜுவின் பயணத்தில் அவன் வெகு சாதாரண மனிதனாக இருந்து அடிதடியில் அடியெடுத்து வைத்து, கேங்ஸ்டர் உலக தாதாவாக மாறும் அவனின் பரிணாம வளர்ச்சி தான் இப்படம். கோதா நகரில் அவன் அதிகாரத்தின் உச்சத்தை அடைய, தியாகங்களைச் செய்கிறான். இந்தத் திரைப்படம் நிலையான ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இல்லாமல், அதிவேகமான சினிமா அனுபவத்தைத் தரும், பரபரப்பான திரைக்கதையுடன்  காதலின் பக்கத்தையும்  கூறுகிறது.

Wayfarer Films மற்றும் Zee Studios தயாரிப்பில் உருவாகியுள்ள “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படம்,  நட்சத்திர நடிகர்கள்,  வித்தியாசமான களம், பரபரப்பான திரைக்கதை, கணிக்க முடியாத திருப்பங்கள் என ஒரு  புதுமையான சினிமா அனுபவத்தை தருவதுடன், மறக்க முடியாத சினிமா பயணமாக இருக்கும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

YT link: https://www.youtube.com/watch?v=YpD3MtwgQ38