“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 

“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 
“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 

“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு  ! 

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் தரமான படங்களை தந்து வரும் இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. 


இந்நிகழ்வில் 
படத்தொகுப்பாளர் செல்வா பேசியதாவது…

“தள்ளிப்போகாதே” தியேட்டரில் வெளியாவது மனதிற்கு மகிழ்ச்சி இப்படத்தில் அதர்வா சூப்பராக செய்துள்ளார். அமிதாஷ் அதிகம் பேசாமல் அழகாக செய்துள்ளார். கதை நாயகி மேல் பயணிக்கும் கதை, அனுபமா அதை நன்றாக செய்துள்ளார்: படம் திரையரங்குகளில் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


Magic Rays சார்பில் திருவேங்கடம் பேசியதாவது… 
நான் 10 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன் நிறைய படங்கள் வெளியீடு செய்துள்ளோம். நான் இதுவரை பார்த்த படங்களிலேயே தள்ளிப்போகாதே மிக அருமையான படம். தியேட்டரில் வெளியிட திட்டமிட்ட போது கொரோனா வந்துவிட்டது இப்போது இப்படத்தை திரைக்கு கொண்டு வருவது மகிழ்ச்சி. அதர்வாவிற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அமிதாஷ் அட்டகாசமாக செய்துள்ளார். ராம் பிரசாத் இப்படம் வெற்றிகரமாக வந்ததற்கு முழுக்காரணம் அவர் தான் அவருக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் மூலம் கபிலன் அனைவரையும் கவர்ந்துள்ளார். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் நன்றி. 


நடிகர் அமிதாஷ் பேசியதாவது… 
மூன்று கதாப்பாத்திரங்களுக்குள் நடப்பதுதான் இந்த கதை இந்த பாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு கண்ணன் சாருக்கு நன்றி. இது போல் ஒரு பாத்திரம் முன்பு நான் செய்ததில்லை. அனுபமா இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் அவரை இங்கு மிஸ் செய்கிறோம். ஒரு சிலரை முதல் முறை பார்க்கும்போதே பிடித்துவிடும், அதர்வா அந்த மாதிரியான நபர். அவருடன் இந்தப்படத்தில் மிகவும் நெருக்கமான நண்பனாகி விட்டேன். இந்தபடம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்தப்படத்தை திரையரங்கிற்கு கொண்டுவருவதற்கு நன்றி.

இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது… 

ஜெயங்கொண்டானில் ஆரம்பித்த பயணம் 10 படங்கள் வரை வந்துள்ளது. அதற்கு முழுக்காரணம் தியாகராஜன் சார் தான். இந்தப்படத்தில் எனக்கு கண்டேன் காதலில் எப்படி ஒரு பாராட்டு கிடைத்ததோ அதே போல் இப்படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். அதர்வா தான் இந்தப்படத்தை முதலில் என்னிடம் அறிமுகம் செய்தார். பின் முறையாக அனுமதி வாங்கி செய்துள்ளோம். இந்தப்படம் எந்த இடத்திலும் ஒரு முகச்சுளிப்பு இல்லாமல், பார்க்க முடிகிற படமாக இருக்கும். இந்தபடத்திற்கு ராம் பிரசாத் மிக ஆதரவாக இருந்தார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு இந்தப்படம் உருவாக மிகமிக உதவி செய்துள்ளார். கபிலனுடன் தள்ளிப்போகதேவுக்கு பிறகு தொடர்ந்து பயணித்து வருகிறேன். மிக அற்புதமான எழுத்தாளர். அமிதாஷ் மிக அற்புதமாக செய்துள்ளார் அவர் சரியாக செயதால் தான் இந்தப்படம் எடுபடும் அதை உணர்ந்து செய்துள்ளார். இந்தப்படம் நன்றாக வர மிக முக்கிய காரணம் அதர்வா மற்றும் அனுபமா தான். இருவரும் போட்டி போட்டு செய்துள்ளார்கள். தள்ளிப்போகாதே வரும் 14 ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் அழுத்தமான பதிப்பாக இருக்கும் நன்றி. 

கபிலன் வைரமுத்து பேசியதாவது… 
தள்ளிப்போகாதே,  இந்தப்படத்திற்கு வசனமும் பாடல்களும் எழுதிய தருணம் அந்த படத்தின் ஒரு கதாப்பாத்திரமாகவே மாறியது போல் இருந்தது. இந்த பொது முடக்க காலத்தில் புன்னகையுடன் ஒருவரை பார்ப்பதே அரிதாக இருந்தது ஆனால் கண்ணன் சார் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தார். அதற்காகவே அவருக்கு நன்றி. நண்பர் ஒருவர் தமிழ் சினிமாவில் ரத்தம் தெறிக்காமல் வன்முறை இல்லாமல் படங்களே வராதா எனக்கேட்டார். இதோ தள்ளிபோகாதே வருகிறது இது மனதிற்கு இனிமை தரும் படமாக இருக்கும். அதர்வாவை திரையில் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. அனுபமா, அபிதாஷ் அதர்வா அனைவருமே அருமையாக செய்துள்ளார்கள். இந்தப்படம் ஒரு அழுத்தமான படமாக இருக்கும் நன்றி. 


தயாரிப்பாளர் TG  தியாகராஜன் பேசியதாவது…
தள்ளிப்போகாதே டிரெய்லர் அற்புதமாக இருந்தது. நல்ல காதல் திரைப்படம் என்பது திரையில் தெரிகிறது. ஒளிப்பதிவு அபாரமாக இருந்தது. அதர்வாவை சின்ன வயசிலேயே தெரியும் அவர் அப்பா எங்கள் நிறுவனத்தில் படம் செய்ததிலிருந்தே தெரியும். முரளியும் நானும் நண்பர்களாகவே பழகினோம். அவர் எங்கள் நிறுவனத்திம் பாணா காத்தாடியில் அறிமுகம் செய்தோம். அந்த படத்திலேயே அவர் நன்றாக செய்திருந்தார். இந்தப்படத்தில் நிறைய முன்னேறி விட்டார். அனுபமா, அமிதாஷ் இருவரும் நன்றாக செய்துள்ளார்கள். படத்தை பார்த்து விரும்பி விநியோகஸ்தர் வெளியிடுவது மனதிற்கு மகிழ்ச்சி. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மணிரத்னம் எப்படி முதல்பட கதை சொன்னார் என ஜெகன் கேட்டதற்கு பதில் சொல்லிவிடுகிறேன். நானும் மணிரத்னமும் மிக நெருங்கிய நண்பர்கள் அவரும் நானும் நிறைய கதை பேசுவோம். மணியின் கன்னட படமான பல்லவி அனு பல்லவி பார்த்து பிரமித்தேன். அவர் அப்போது என்னிடம் கதை இருக்கிறது படம் செய்யலாம் என்று சொன்னவுடன் செய்யலாம் என்று செய்தேன், அப்படித்தான் பகல்நிலவு உருவானது. எங்கள் நிறுவனம் சீரியல் செய்த போது கண்ணன் எங்களுடன் வேலை செய்தார். அவர் மணிரத்னத்துடன் வேலை செய்துவிட்டு வந்தபோது, மணிரத்னம் அவரை பற்றி பெருமையாக சொன்னார். அவரிடம் மிகப்பெரிய திறமை இருக்கிறது. அதர்வாவிற்கு இதயம் மாதிரி இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி. 


நடிகத் அதர்வா  பேசியதாவது… 
 2 வருஷம் கழிச்சு எனக்கு நடக்கும் முதல் ப்ரஸ் மீட் இது, இந்த 2 வருடத்தில் நிறைய விசயங்களை கடந்து வந்துள்ளோம். இப்போது  எல்லோரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நானும் கண்ணன் சாரும் ஒரு காதல் படம் செய்யலாம் என பேசியபோது, இந்தப்டம் எங்கள் பேச்சில் வந்தது. அந்தக்கதையை தமிழுக்கு மாற்ற, கபிலனை தவிர வேறு யாருமே எங்கள் மனதில் வரவில்லை. நாங்கள் நினைத்தது போல் தமிழில் மிக அழகாக மாற்றி தந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்திற்கு எங்கள் முதல் சய்ஸாக அனுபமா  தான் இருந்தார். அமிதாஷ் பாத்திரத்திற்கு நிறைய பேரை பார்த்தோம் கடைசியாக தான் அவர் வந்தார் அற்புதமாக செய்துள்ளார். கண்ணன் வேலை செய்யும் வேகம் பற்றி நிறைய பேர் சொல்லி விட்டார்கள். இந்தபடத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்கு தாடி வளர்க்க வேண்டும் நான் தாடி வளர்த்த மூன்று வாரங்களில் ஒரு படத்தையே முடித்து விட்டு வந்துவிட்டார். அவ்வளவு வேகமாக வேலை செய்யக்கூடியவர். அனுபமா அற்புதமான நடிகை, இதில் அவரை எல்லாருக்கும் பிடிக்கும்.  தியாகராஜன் சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் இங்கு வந்து என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் நன்றி.  

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து  பாடல்கள் மற்றும் வசனத்தை  எழுதியுள்ளார். இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். Magic Rays நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.