இயக்குனர் இராம நாராயணன் இன்று பிறந்த தினம்(23.07.2020 )

இயக்குனர் இராம நாராயணன் இன்று பிறந்த தினம்(23.07.2020 )
இயக்குனர் இராம நாராயணன் இன்று பிறந்த தினம்(23.07.2020 )

சிரித்த முகம். சிறந்த சிந்தனையாளர். ஒரே தலைவனுடன் (கலைஞர்) பயணித்தவர்.திட்டமிட்டு படம் தயாரித்தவர்.

காரைக்குடி கலை உலகிற்கு தந்த இன்னுமொரு தங்கம் இவர்.தமிழ் உட்பட பல மொழிகளில் 126 படங்களை இயக்கியவர்.

பட்ஜெட்டில் படம் எடுத்து குறைந்த லாபத்திற்கு விற்றவர்.

தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகையர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர் தோழர்கள் என அனைவரும் வளமுடன் வாழ விருப்பமுடன் உழைத்தவர்.

தன்னால் பிறர் பாதிக்கக் கூடாது என நினைத்து வாழ்ந்தவர்.விலங்குகளுக்கும் மவுசு வர கதை தந்து இயக்கியவர்.

தயாரிப்பாளர்கள்நலம் காண பாகுபாடின்றி செயலாற்றியவர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் 5 வருடம் தலைவராய் இருந்து பல்வேறு சலுகைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தந்தவர்.

கட்சி பாகுபடின்றி திரை உலகில் அனைவரிடமும் பழகியவர், பணியாற்றியவர்.

இராமநாராயணன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நினைப்போம். அவரது சாதனைகளை போற்றுவோம்.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று திரை உலகம் சொல்ல வேண்டும்" என்பதற்கு சான்றாய் வாழ்ந்து இயற்கை எய்திய இராம நாராயணன் 

புகழ் ஓங்குக!!