என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த விதி - தனுஷ் பட நடிகை நெகிழ்ச்சி

'வாத்தி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் சம்யுக்தா. ஏற்கனவே சில தமிழ் படங்களில் அவர் நடித்து இருந்தாலும் வாத்தி பெயர் வாங்கி கொடுத்துள்ளது. தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.நடிகையான அனுபவத்தை சம்யுக்தா நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் கேரளாவில் சிறிய கிராமத்தில் பிறந்தேன். என்னை சுற்றி இருப்பவர்களிடம் ஏதோ ஒரு சினிமாவில் நடித்தேன் என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். முதல் படத்திற்கு பிறகு படிப்புக்காக ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகினேன். ஆனால் விதி என்னை மீண்டும் சினிமாவிற்கே அழைத்து வந்து விட்டது. நடிகையாக திருப்தி அளிக்கும் ஒரு படத்தில் நடித்தால் போதும் என நினைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் சினிமா மீது காதலில் விழுந்தேன். இப்போது சினிமாதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது.