புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குனரின் பிரபஞ்சம்
புதுமுகங்கள் நடிக்க
அறிமுக இயக்குனரின்
பிரபஞ்சம்
********
பிரைட் ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ. கரீம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம்தான் " பிரபஞ்சம் ".
வீரா, சமிதா, அம்ருதா வி. ராஜ். போஸ், கதிர்வேல், குருமூர்த்தி, ரோகித், இன்னும் பலர் நடித்துள்ளனர். சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள அழகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது.
உதய்சங்கர் கேமராவையும், பிரேம் இசையையும், ரகு படத்தொகுப்பையும் , இடிமின்னல் இளங்கோ சண்டை பயிற்சியையும், மனோகர் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.
படத்தைப்பற்றி இயக்குனர் சங்கர். ஜி.யிடம் கேட்ட பொழுது " இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். இந்த
பிரபஞ்சம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத்தெரிந்தவர்களுக்கே இந்த பிரபஞ்சம் வசப்படுகிறது என்பதை பரபரப்பான கதையாக்கி, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன் " . என்றார்.
இவர் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்தவர். தனது முதல் படமாக இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார்.
விஜயமுரளி
PRO.