டாப் கியர் இந்தியா 3வது வருட நிறைவை இதழின் வெளியீட்டின் ஒரு பகுதியாக, டாப் கியர் இந்தியாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான் .
டாப் கியர் இந்தியா 3வது வருட நிறைவை இதழின் வெளியீட்டின் ஒரு பகுதியாக, டாப் கியர் இந்தியாவின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான் . மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படத் துறைகளில் ஆட்டோமொபைல் பத்திரிகையின் கவர் ஸ்டாராக இடம்பெற்ற முதல் நடிகர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயின் ஆட்டோட்ரோம் சர்க்யூட் மற்றும் ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி காருடன் துல்கர் சல்மான் இந்த இதழில் போஸ் கொடுத்துள்ளார். அதி அற்புத ஃபேஷன் உடையில் அதிரடியான போஸில் அனைவரையும் அதிர வைத்துள்ளார் துல்கர்.