கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் இணைந்த அர்ஜெய் - லிங்கா
கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் இணைந்த அர்ஜெய் - லிங்கா
அர்ஜெய்- லிங்கா கூட்டணியில் உருவாகும் கேங்ஸ்டர் ஃபேண்டஸி
தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும் GANGSTER-FANTASY படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ (Small Fox Studio) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் அர்ஜெய் - லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். முன்னதாக தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி - 2, எமன், அன்பறிவு, தேள், போன்ற படங்களில் மிரட்டிய அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
அதுபோல் "சேதுபதி" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் மிரட்டிய லிங்கா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய் மற்றும் லிங்கா கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பணிகளை அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் மேற்கொள்கிறார். F.I.R, இன்ஸ்பெக்டர் ரிஷி, படத்தின் புகழ் அஸ்வத் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு பிரேண்டன் ஷசாந்த்.
கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் ஜெயக்குமார், சரத் ரவி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.