’அமீகோ கேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’அமீகோ கேரேஜ்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
அம்மா, அப்பா, படிப்புக்கு ஏத்த வேலைன்னு வாழ்ந்து வரும் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், தான் எதிர் கொண்ட சின்ன பிரச்சனையை தீர்க்க மேற்கொள்ளும் முயற்சி அவரை பெரிய சிக்கலில் மாட்டு விடுது. அதிலிருந்து அவரது வாக்கையும் வேறு பாதைக்கு மாறுது. அந்த பாதையிலிருந்து மீண்டாரா? இல்லையான்னு ஆக்ஷன் கலந்து சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.
நாயகனா நடிச்ச மாஸ்டர் மகேந்திரன் பள்ளி பிளஸ் கல்லூரி பருவம்ன்னு ரெண்டு கெட்டப்பில் நடித்திருக்கிறார். கல்லூரி 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது, அவங்க மகேந்திரனை தம்பின்னு கூப்பிட்டாலும், அதெல்லாம் முடியாதுன்னு அடம் பிடிக்கிறது, அதுக்கப்புறம் பொறுப்பா வேலைக்கு போறவர், வேற வழி இல்லாம எடுக்கும் ஆக்ஷன் அவதாரமும் நேர்த்தி.
கட்டுமஸ்தான் உடல், நல்ல வசன உச்சரிப்பு, என எல்லாத்திலும் சிறந்த கதாநாயகனாக ஜொலிக்கிறார். சண்டைக்காட்சிகளில் நானும் ஒரு மாஸ் ஹீரோவா வருவேன்னு ரிஜிஸ்டர் பண்ணி நடிச்சிருக்கார். இனிமே இவரை பல படங்களில் ஹீரோவா பார்க்கலாம்.
நாயகியா நடிச்ச ஆதிராவை கதைக்கு தேவையான அளவுக்கு பயன்படுத்தியிருக்காங்க. ஆதிராவும் திரைக்கதைக்கு ஏற்ப நடிச்சிருக்காங்க.
கல்லூரி மாணவியா நடிச்ச ரம்யா, சில காட்சிகளில் நடிச்சது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.
அமீகோ கேரேக் உரிமையாளரா ஜி.எம்.சுந்தர் நடிச்சிருக்கார். முதல்ல இயல்பா நடிக்கிறார், பிறகு அவர் அதிராடியாக எடுக்கும் ஆக்ஷன் மேட்டர் எதிர்பார்க்காத ஒன்று.
வில்லன்களாக தாசரதி, முரளிதரன் சந்திரன் மிரட்டலான் தோற்றம் மற்றும் நடிப்பில் மிரட்டியிருக்காங்க.
மதனகோபால், சக்திகோபால், முரளிகமல், சிரிகோ உதயா, எல்லோரும் கொடுத்த வேலைய கரெக்டா செஞ்சிருக்காங்க.
விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் மிக நேர்த்தியா படமாக்கப்பட்டிருக்கிறது.
பாலமுரளி பாலுவின் இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்குது.
காதல், செண்டிமெண்ட், மாணவர்களின் கலாட்டா, இளைஞர்களின் வாழ்க்கை, எல்லாம் சேர்த்து ஆக்ஷன் பொழுது போக்கு படமா இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நாகராஜனுக்கு பாராட்டுக்கள்.