‘எப்போதும் ராஜா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

இயக்குநரும் தயாரிப்பாளருமான விண் ஸ்டார் விஜய் இரட்டை வேடங்களில் நடிச்சிருக்கார்.

அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி இந்திய அளவில் வாலிபால் விளையாட்டு வீரராகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த முதல் நடிகர் விண் ஸ்டார் விஜய் என்று தான் நினைக்கிறேன்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான அண்ணனுக்கு அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என எதிரிகள். இதற்கிடையே இவர் தனது அம்மாவிற்கு வாக்கு கொடுத்தது போல் அணாதை பெண்ணை திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

உலக அளவில் வாலிபால் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் விளையாட்டில் பல எதிரிகள், குறிப்பாக பெண் எதிரிகள் இருக்கிறார்கள். இவர்களை எப்படி இரண்டு பேரும் தங்களது ஸ்டைலில் எதிர்கொள்கிறார்கள் என்பது தான் படத்தோட மீதி கதை.

இளம் ரசிகர்களின் மனதை வரும் வகையில் காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் திரையில் நடித்து தனக்கென புதிய ரசிகை, ரசிகர்களின் கவனத்தை முதல் படத்தில் பெற்றுள்ளார் விண் ஸ்டார் விஜய். தனது ரசிகர்களை இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கபிலேஸ்வர் & ராம்ஜி பாடலுக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசை மிகவும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் கதைக்கு ஏற்றபடி சிறப்பாக தனது பணியை செய்துள்ளார்.

திரைக்கதை இயக்கம் தயாரிப்பாளர் என தனது முதல் படத்தில் பன்முக திறமையை வெளிப்படுத்தி இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்துள்ளார் விண் ஸ்டார் விஜய்.

தொடர்ந்து வெற்றிபெற சென்னை பத்திரிக்கா பராட்டுக்கள் வாழ்த்துக்கள்.