கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணமா?
தமிழில் 'இது என்ன மாயம் ' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன்,ரெமோ,தொடரி, நடிகையர் திலகம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.நடிகையர் திலகம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.இதில் சாவித்திரி வேடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தற்போது ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 'குயின்' படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்க்கு 27 வயது ஆகிறது.இந்த நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக இணைய தளங்களில் பரவி வருகிறது.பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனை, அவர் மணக்க இருப்பதாகவும், திருமணத்தை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.ஆனாலும் இதனை கீர்த்தி சுரேஷ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.