தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் விஷால் மளிகை சாமான்கள் கொடுத்து வழங்கினார்
நடிகர் விஷால் , தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சென்னையை சார்ந்த சுமார் 1500 பேருக்கு , ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை கொடுத்து உதவினார். அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்க்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது. மற்றும் தொற்று நோய் தடுப்பதற்க்கான கைஉறை 1000 , முக கவசம் 1000 துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார்.