நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த டிரெய்லர் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் கிரிப்பான கதைக்களத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் நடக்கும் போர் பற்றியும் இருபெரும் சக்திகளுக்கு இடையேயான மோதலையும் இந்த டிரெய்லர் காட்டுகிறது.  

இளமை ததும்பும் காதல், அம்மா செண்டிமெண்ட், இயக்குநர் பூரியின் டிரேட் மார்க்கான மாஸ், ஆக்‌ஷன் என டிரெய்லர் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் புல்லட் போல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.  பூரியின் ஸ்டைலிஷான காட்சிகளும் கிளைமாக்ஸில் வரும் சிவலிங்கத்தின் பிரம்மாண்டமும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் ராம் டபுள் எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். வலுவான வில்லனாக சஞ்சய் தத் நடித்திருக்கிறார். காவ்யா தாப்பர் அசரடிக்கும் அழகில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்டைலிஷ் இயக்கம், தாக்கம் ஏற்படுத்தும் வசனங்கள், தீவிரமான ஆக்‌ஷன் என 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் எனப் படக்குழு உறுதியளிக்கிறது. பூரி ஜெகன்நாத் மற்றும் ராம் பொதினேனியின் 'டபுள் ஸ்மார்ட்' திரைப்பட டிரெய்லர் சமீபத்தில் பார்த்த காட்சிகளில் சிறந்தது என்று சொல்லலாம்.

பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: ராம் பொதினேனி, சஞ்சய் தத், காவ்யா தாப்பர், அலி, கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
உலகளாவிய வெளியீடு: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி,
தலைமை செயல் அதிகாரி: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா