அனுஷ்கா - மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ ரிலீஸ் தேதி இதோ!
ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பாகமதி’, ‘சைரா’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில், வாய் பேசாத காது கேளாத ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.
‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘நிசப்தம்’ படத்தில் மீண்டும் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சஸ்பன்ஸ் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2020, ஜனவரி.31ம் தேதி ரிலீசாகவுள்ளது.