6 தனிதனி கதை ஒரே திரைப்படம்தான் கசடதபற
6 தனிதனி கதை ஒரே திரைப்படம்தான் கசடதபற
பிரபல இயக்குனரான சிம்புதேவன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் கசடதபற.
மருந்து கடையில் வேலை பார்க்கும் பிரேம்ஜி பணக்கார பெண்மணி ரெஜினாவை காதலிக்கிறார். இதனால் அவர் மீது திருட்டு பட்டம் கட்டப்படுகிறது. தாதா ஒருவனால் பிரேம்கி விரட்டப்பட தாதாவின் செயலால் அவருடைய மகன் சாந்தனுவே அவரை வெறுக்கிறார்.
எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத போலீஸ் சந்தீப் கிஷன்-ஐ தொடர்ந்து என்கவுண்டர் செய்ய வைக்கிறார் மேலதிகாரி.
குறுக்கு வழியில் பணக்காரனாக திட்டம் போடுகிறார் ஹரிஷ் கல்யாண். அக்கம்பக்கத்தினரால் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட விஜயலட்சுமி இவரை காப்பாற்றுகிறார்.
குழந்தைகளுக்கு போலி மருந்து கொடுத்து தூக்கு மேடை வரை செல்கிறார் வெங்கட் பிரபு. இப்படி வெவ்வேறு விதமான ஆறு கதைகளை வைத்து சிம்புதேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
நடிப்பு :
படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது.
தொழில்நுட்பம் :
இசை :
யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன் என 6 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர்.
ஒளிப்பதிவு :
எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர் ஆகியோர் இணைந்து படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
                        
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        