14வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா தமிழர் விருது 2023 01.தை திருவள்ளுவர் ஆண்டு 2054 15.ஜனவரி 2023
14வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
தமிழர் விருது 2023
01.தை திருவள்ளுவர் ஆண்டு 2054
15.ஜனவரி 2023
———————————————-
அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய திரைக்கலைஞர்கள்
தமிழ்நாடு ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
உலகத் தமிழர்களின் பெருநாளில் அனைவருக்கும் எமது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.
"தமிழ்நாடு" தமிழ்த் திரைப்படங்களுக்கு – தமிழர் விருதுகளை
இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் !
பதின்மூன்று வருடங்களாக மிகவும் சிறப்பாக
நடைபெற்றுவரும் இவ் விழா பிரமாண்ட விழாவாக பல
நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது. பல ஆண்டுகள் கடுமையான உழைப்போடு எங்கள் விழாவினை விரிவடையச் செய்து வருகின்றோம்.
2022 இல் பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருந்தது. இது எமது தெரிவுகளுக்கு கடினமாக இருந்தது. எமது பார்வைக்கு கிடைக்கப் பெறாத சில நல்ல திரைப்படங்கள், எங்கள் தெரிவுகளில் இடம்பெறாமல் போயிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதையும் அறிவோம்.
ஆகவே இனி வரும் காலங்களில், தமிழ் நாட்டில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை ஒவ்வொரு ஆண்டும் நிறைவு பெறுவதற்கு முன்பு எமக்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் (2022) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து, எமது நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 20 திரைப்படங்கள், தமிழர் விருதுகளை பெறும் தமிழ் நாட்டு கலைஞர்களின் விவரங்களை
அறியத்தருகின்றோம்.
14 வருடங்களாக உங்கள் அனைவருடைய பேராதரவோடு தான் இத் திரைப்பட விழாவை சிறப்புற நடத்த முடிகிறது. ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகின்றோம்.
தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும்
குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் எதிர்வரும் 15.02.2023 அன்று அறிவிக்கப்படும்.!
என்றும் அன்புடன்.
வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
15.01.2023