"ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர் "  ஆவணப்படத்தின் முன்னோட்டம்

 "ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர் "  ஆவணப்படத்தின் முன்னோட்டம்

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் ஐயா இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

 "ஆர்.எம்.வி - தி கிங் மேக்கர் "  ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த  ஆவணப்படம் மிக  பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது .

தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், சத்யராஜ், சரத்குமார், இயக்குனர்கள் S.P. முத்துராமன்,        P.வாசு, சுரேஷ் கிருஷ்ணா போன்ற திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா திரு மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,  உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த  பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.

மேலும் ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தை சார்ந்த காஞ்சி பெரியவர் ஆகியோறும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஐயா அவர்களை போற்றியுள்ளனர். 

அதுமட்டுமல்லாது பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், மற்றும் பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி ஆகியோறும், தமிழிலக்கிய துறையை சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களும், முன்னாள் அரசவை கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்களும் மேலும்  கலை இலக்கிய கல்விதுறையை சார்ந்த ஆன்றோர் சான்றோர் என அனைவரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர். 

தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் இந்த ஆவணப்படத்தை  உருவாக்கியுள்ளனர். 

ஆவணப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப்  ( youtube.com/sathyamoviesonline ) என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Trailer Link : youtu.be/NpzFIneP8nQ

RMV: The Kingmaker– Official Trailer

A Sathya Movies Documentary

Releasing soon Worldwide!

From the golden age of Tamil cinema to the heart of Tamil Nadu politics, RMV: The Kingmaker traces the extraordinary journey of Arulalar Ayya RM Veerappan — the man behind legends, the strategist behind revolutions, and the visionary who shaped Tamil Nadu’s cultural and political landscape.

Featuring never-before-heard insights from

Honorable chief minister Thiru.M K Stalin

Thiru.Rajinikanth and other iconic film personalities

Political contemporaries

Literary minds

And spiritual leaders

Crafted with rare archival footage,and powerful testimonials, this documentary is more than a tribute — it is a chronicle of influence, intellect, and integrity.