நான் என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர் அஜித்: பிக்பாஸ் 3 நடிகை!

நான் என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர் அஜித்: பிக்பாஸ் 3 நடிகை!
நான் என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர் அஜித்: பிக்பாஸ் 3 நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நடிகை சாக்சி அகர்வால், சமீபத்தில் கவின் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியதோடு, தன்னுடைய காதலுக்கு தன்னிலை விளக்கமும் அளித்தார். சட்டையை மாற்றுவது போல் பெண்களை கவின் மாற்றி வருவது குறித்தும் அவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படப்ப்பிடிப்பின்போது தல அஜித்தை நடிகை சாக்சி அகர்வால் நேரில் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படத்தை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித் என்றும், அஜித் ஒரு ஜெண்டில்மேன் என்றும், தொழிலில் நேர்மையானவர் என்றும், எந்த ஒரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்தக்கூடியவர் என்றும் சாக்சி அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.