மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...? - முக்கிய திருப்பங்களுடன் "பொன்னி C/O ராணி"
கலைஞர் தொலைக்காட்சியில் ப்ரீத்தி சஞ்சீவ், ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் "பொன்னி C/O ராணி" நெடுந்தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடரின் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான வில்லி புஷ்பவல்லி கதாபாத்திரம் பொன்னி வீட்டில் அடியெடுத்து வைக்கவிருப்பதால் தொடரில் பல திருப்பங்கள் வரவிருக்கிறது.
புஷ்பவல்லி, பொன்னியின் கணவரான ராஜாராமின் அத்தை பெண் என்பதை அறியாமல், பொன்னி, புஷ்பவல்லிக்கு உதவ, ராஜாராம் - புஷ்பவல்லி சந்திப்பால் மறைக்கப்பட்ட உண்மைகள் மீண்டும் வெளிவருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு திருப்பங்கள் நிறைந்த "பொன்னி C/O ராணி" நெடுந்தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .