முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் விற்கும் திட்டத்தை கைவிட விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்களை அறிவித்து, விண்ணப்பங்கள் பெற்று, குலுக்கல் நடத்தி உரிய ஒதுக்கீட்டாளரை தேர்வு செய்வது வழக்கம். இதுவே வாரியத்தின் வழக்கமான நடைமுறையாக இருந்தது. தற்போது வழக்கமான நடைமுறைகளை கைவிட்டு, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ஏழை, எளிய மக்களால் உடனடியாக செலுத்த முடியாது. எனவே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வெளிப்படை தன்மையோடு குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்க வேண்டும்.