முகப்பேர் வேலம்மாள் பள்ளி வியப்பூட்டும் வகையில் கொண்டாடிய சர்வதேச யோகா தினம் !
முகப்பேர் வேலம்மாள் பள்ளி வியப்பூட்டும் வகையில்
கொண்டாடிய சர்வதேச யோகா தினம் !
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் , ஜூன் 21- 2022 அன்று பள்ளி வளாகத்தில் 'மனித நேயத்திற்கான யோகா' என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
இறை வணக்கத்தின் மூலம் இறை அருளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி ஆரம்பமாகி, கௌரவ பெருமக்களின் முன்னிலையில் ஆரம்பமானது.
சிறப்பு விருந்தினராக சர்வதேச தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் யோகாவில் பல கின்னஸ் உலக சாதனை படைத்த செல்வி.யோக வைஷ்ணவி அவர்கள் பங்கு பெற்றார்.இவர் இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடம்
யோகாவின் எண்ணற்ற நன்மைகள் மற்றும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவம் போன்றவற்றையும் விளக்கினார். மேலும் 2022 , கருப்பொருளுடன் இந்த தனித்துவமான நாள் இடம்பெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகச் சிறந்த தன்னார்வத்துடன் பல்வேறு யோகா ஆசனங்களைச் செய்வதற்குத் தயாராகினர்.மேலும் மாணவர்கள் யோகாவை நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு இன்றியமையாத கருவியாக வடிவமைத்துக் காட்டினர். இவ்விழாவின் இறுதியில் சிறப்பு விருந்தினர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியதுடன்
யோகாவின் மூலம் மனதையும், உடலையும் மேம்படுத்துவதை வலியுறுத்தி விழாவை இனிதே
ஆரோக்கியமான நாளாக முடித்தார்.
உலக மக்கள் யாவரும் மகிழ்ச்சியில் வாழ்வதற்கு யோகாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலம்மாளின் முயற்சி அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்த து.