விலை உயர்வை கண்டித்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நிய கடன் சுமை ரூ.13,000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏப்ரலில் விலைவாசி உயர்வு 17.3%ஆக உள்ள நிலையில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விலை உயர்வை கண்டித்தும், மின்சாரத்திற்கு வரி விலக்கு மற்றும் கோதுமை மாவு மானியம் கோரியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். 90பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு 2,300 கோடி பாகிஸ்தான் ரூபாய் அளவிலான நிதி உதவியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதன் விளைவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிரட் விலை மற்றும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.