‘மோன்ட்ரா எலக்ட்ரிக் மூன்று சக்கர(3W) ஆட்டோவை’ தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
‘மோன்ட்ரா எலக்ட்ரிக் மூன்று சக்கர(3W) ஆட்டோவை’ தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புகைப்பட தலைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘மோன்ட்ரா எலக்ட்ரிக் மூன்று சக்கர(3W) ஆட்டோ’ வை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சென்னை, ஆகஸ்ட் 29, 2022: கடைசி மைல் இயக்கம் (Last Mile Mobility) பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு, தமிழக அரசின் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கிருஷ்ணன் எஸ், மற்றும் தமிழ்நாடு Guidance இன் MD & CEO. திருமதி . பூஜா குல்கர்னி ஐஏஎஸ் ஆகியோரது முன்னிலையில், 'மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோ'வை இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உமிழ்வே இல்லாத மின்சார வாகனங்கள், எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் அதே வேளையில், நிலையான இயக்கத்தை ஆதரிக்கும்.
முருகப்பா குழும நிறுவனமும், ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆப் இந்தியா இன் புதிய துணை நிறுவனமான டிஐ கிளீன் மொபிலிட்டி , செப்டம்பர் 06, 2022 அன்று 'மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோ' என்ற பயணிகள் வாகனத்தை முறைப்படி அறிமுகப்படுத்துவதன் மூலம் கடைசி எல்லை போக்குவரத்தை மாற்றும்.