ஜெயா தொலைக்காட்சியின் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் காலை 9:00 மணிக்கு " தேன்கிண்ணம் " இயக்குனர் விக்ரமன் தனது உள்ளம் கவர்ந்த பாடல்கள், பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு தேன்கிண்ணம் ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவியில் காலை 10:00 மணிக்கு " ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றம் "குடும்பத்தின் மகிழ்ச்சி எதிலுள்ளது? ஆண்களின் பையிலா? / பெண்களின் கையிலா?ஆண்களின் பையிலே என்ற தரப்பில் வாதிட, நகைச்சுவைச் சக்கரவர்த்தி திரு. ரவிக்குமார், நயவுரை நாவலர் ,திரு. தாமல் சரவணன் இராஜபாளையம் உமாசங்கர் அவர்களும், பெண்களின் கையிலே என்ற தரப்பில் வாதிட, சொல்லரசி திருமதி. அட்சயா, நற்றமிழ் நங்கை திருமதி. கபிலா விசாலாட்சி, நகைச்சுவை நாவரசி திருமதி. மலர்விழி ஆகியோரும் பங்கேற்றனர், சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் தலைமையில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .

மேலும் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு 'சாய் வித் செலிப்ரிட்டி யில் ”(Chai with Celebrity) நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள நந்தன் படத்தின் இயக்குனர் இரா.சரவணன், நடிகை ஸ்ருதி பெரியசாமி மற்றும் நடிகர் கட்டெறும்பு பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் நந்தன் பட அனுபவங்களையும், தொகுப்பாளினி பவித்ராவின் வித்தியாசமான கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளிக்கும் கலகலப்பான நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாகிறது.