வேலம்மாளில் 73-வது குடியரசு தினம்  கொண்டாடப்பட்டது.

வேலம்மாளில் 73-வது குடியரசு தினம்  கொண்டாடப்பட்டது.
வேலம்மாளில் 73-வது குடியரசு தினம்  கொண்டாடப்பட்டது.

வேலம்மாளில் 73-வது குடியரசு தினம்  கொண்டாடப்பட்டது.

 கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க, 73-வது குடியரசு தினம், முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் உற்சாகத்துடனும், தேசபக்தியுடனும் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த சென்னை மாநிலக் குற்றப் பதிவுப் பணியகத்தின் உதவிக் காவல் ஆணையர் மாண்புமிகு டாக்டர். ஜி.கே. கண்ணன் அவர்கள் வேலம்மாள் பள்ளியின் கல்வி இயக்குநர் திருமதி. ஜெயந்தி ராஜகோபாலன் மற்றும் முதுநிலை முதல்வர் திரு கே.எஸ்.பொன்மதிஆகியோர் முன்னிலையில்
மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார்.
.
பின்னர் டாக்டர் ஜி.கே.கண்ணன், இந்திய அரசியலமைப்பின் அழுத்தமான அம்சங்கள் மற்றும் நுணுக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசினார், சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக வரையறுத்தார்.
இறுதியாக மாணவர்களிடையே தேசபக்தியைத் தூண்டும் வகையில் மாணவர்களை ஊக்குவித்துப்  பேசிய சிறப்பு விருந்தினர் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டு, பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்கள்  தங்களின் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்ற  வேண்டி அவர் தனது உரையை முடித்தார்.
தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. 
தொற்றுநோய்களுக்கு இடையில் பாரத அன்னைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மிகுந்த சிறப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக ,  இந்த நாளை மாற்றியது வேலம்மாள் பள்ளி .