தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்

தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்
தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்

மகளிர் உலக பாக்சிங் தொடரின் 75 கிலோ எடை பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஆஸ்திரேலியாவின் கெய்த்லின் பார்க்கரை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஏற்கனவே உலக தொடரில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த லவ்லினா நேற்று முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.  நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 4வது தங்கம் இது. நேற்று முன்தினம் நீத்து கங்காஸ் (48 கி.), சவீத்தி போரா (81 கி.) தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தனர்.