இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்

இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்
இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்
இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்

ரெட்மி நோட் 11T சீரிசில் நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சீன சந்தையில் மே 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் கேமரா பம்ப் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களை ரெட்மி டீசர் வாயிலாக ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்திய சந்தையில் ஏற்கனவே ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளன.


அதன் படி ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 22041216UC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், மாலி G610 MC6 GPU, ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் சூட், 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். போன்ற அம்சங்களை வழங்கப்படலாம்.

ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 6GB+128GB மெமரி, 8GB+128GB மெமரி, 8GB+512GB மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8GB+128GB மெமரி, 8GB+256GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 12GB வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம். 

மற்ற அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் மாடல்களிலும் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இவை புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும்.