“ஆடவா பாடவா” ( இரண்டாம் அரை இறுதிச்சுற்றில் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்பெஷல்)
ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், ஆடலும் பாடலும் சேர்ந்த நிகழ்ச்சியாக, புதுயுகம் தொலைக்காட்சியில் “ஆடவா பாடவா” என்ற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பன்முக கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என் சுரேந்தர் , கர்நாடக இசைப்பாடகர் மற்றும் குரல் பயிற்றுனர் விஜயலட்சுமி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து 32 பாடகர் மற்றும் 32 நடனக்கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். தனி சுற்று, ஜோடி சுற்று என பாடகர்களும், நடனக்கலைஞர்கள் கலை விருந்து படைத்து வரும் இந்நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் நந்தினி ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பாடகர் மற்றும் நடனக்கலைஞர் என இருவரையும் ஒரே மேடையில் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பரபரப்பான இதன் இரண்டாம் அரை இறுதிச்சுற்றில் ஏஆர் ரஹ்மான் ஸ்பெஷல் நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.