கலைஞர் டிவியில் "கான்ஜூரிங் கண்ணப்பன்" - அக்டோபர் 2 சிறப்பு திரைப்படம்
கலைஞர் டிவியில்
"கான்ஜூரிங் கண்ணப்பன்" - அக்டோபர் 2 சிறப்பு திரைப்படம்
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்த "டான்" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் கலகலப்பான திகில் திரைப்படமான "கான்ஜூரிங் கண்ணப்பன்" ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் இன்டர்வியூ செல்லும் அவசரத்தில் கண்ணப்பன் (சதீஷ்), வீட்டில் பல வருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கிறார். அப்போது அவருக்கு இறகுகளால் பின்னப்பட்ட ‘ட்ரீம் கேட்சர்’ கிடைக்கிறது. அது பில்லி சூனியம் வைத்து கட்டப்பட்டது என்பதை அறியாமல் அதில் இருக்கும் இறகை கண்ணப்பன் பிய்த்து விட, இரவில் தூங்கும்போது கனவில் பாழடைந்த அரண்மனைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு பேய்களால் விரட்டப்படுகிறார். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், நண்பர்களும் அதேபோல் செய்ய அவர்களும் அரண்மனைக்கும் சிக்குகின்றனர். இந்த பேய்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பான திகில் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இதில் நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், எல்லி அவ்ரம், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.