அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் பத்மஸ்ரீ மோகன்மல் சோர்டியா தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டயின்  தொடக்க விழா

  • கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் T-20 மட்டைப்பந்து  (கிரிக்கெட்) போட்டி
  • சென்னை முழுவதிலுமுள்ள உள்ள 24 கல்லூரிகளின் பங்கேற்பு

சென்னை, மார்ச் 13, 2024: சென்னையில் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனமான அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, பத்மஸ்ரீ மோகன்மல் சோர்டியா நினைவாக நடத்தப்படும்   கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் T-20 பத்மஸ்ரீ மோகன்மல் சோர்டியா தங்கக் கோப்பை  கிரிக்கெட் போட்டியைத் தொடக்கி வைத்தது. இப்போட்டியினைக் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு ஸ்ரீ ஹேமந்த் துகர் அவர்கள் கல்லூரியின் புதிய  மட்டைப் பந்து (கிரிக்கெட்) மைதானத்தில் இன்று தொடங்கிவைத்தார்மிகுந்த உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கிடையில்  போட்டிதொடங்கி்யது.

                மாணவர்களிடம் தோழமை உணர்வையும் விளையாட்டுத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் பத்மஸ்ரீ மோகன்மல் சோர்டியா தங்கக் கோப்பை மட்டைப் பந்துப் (கிரிக்கெட்) போட்டியில் சென்னை முழுவதும் உள்ள 24 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்கும் இப்போட்டி  மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதுவி..டி., ராஜலட்சுமி இன்ஜினியரிங், லயோலா, குருநானக், தியாகராய கல்லூரி, பச்சையப்பாஸ், எம்.சி.சி., நந்தனம் கலை, புதுக்கல்லூரி, டி.ஜி.வைணவக் கல்லூரி ஆகியவை இப்போட்டியில் கலந்துகொள்ளும் கல்லூரிகளில் குறிப்பிடத் தகுந்தவைகள்நாக்-அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டிகள் மார்ச் 28, 2024 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.

                தொடக்க விழாவின் போது பேசிய ஸ்ரீ ஹேமந்த் துகர் அவர்கள்ஜெயின் கல்லூரியில் இப்போட்டி நடத்தப்படுவதன் காரணம், “கல்லூரி மாணவர்களின் திறமையையும்விளையாட்டுத் திறனையும்  மேம்படுத்த வேண்டும் என்பதே. உயர்தர வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள ,புதிய மட்டைப் பந்து  (கிரிக்கெட்) மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகள் மாணவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கவும் அவர்கள்  தடகளப் பயிற்சிகளில் சிறந்து விளங்குவதற்கான தளமாகவும் அமையும். புதிய மட்டைப் பந்து (கிரிக்கெட்) மைதானம் விளையாட்டின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகச் சிறந்த  அனுபவத்தைத் தருவதாகவும் அமையும்என்றார்.

கல்லூரியின் புலத்தலைவர் முனைவர் எம்.எம்ரம்யா அவர்கள் பேசுகையில்அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும்  பத்மஸ்ரீ மோகன்மல் சோர்டியா தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள்  பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்எங்களின் புதிய மட்டைப்பந்து( கிரிக்கெட் )மைதானம் மாணவர்களுக்கு இத்துறையில்  நல்லதொரு  முறையான விளையாட்டுப் பயிற்சியை  வழங்கும்.இந்நிகழ்வின் நோக்கம்,   பாடப்புத்தகங்களில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே.இதுபோன்றதொரு சிறப்பு வாய்ந்த நிகழ்வை நடத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்என்று கூறினார்.