நீட் தேர்வில் ஆள்மாறட்டம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறட்டம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மஹாவீர், ஜிஜேந்திரா ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறட்ட மோசடி செய்வதற்கு மூளையாக செயல்பட்ட நரேஷ் பிஷ்னோய் என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுத வந்த சஞ்சு யாதவ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்த விவகாரத்தில் இதுவரை 4 மாணவர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.