“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”

பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

இது வரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ,எழுத்தாளர் கண்மணி ராஜாமுகமது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.                   

 

தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும்,தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும்  முன்னாள்  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்த திரு .மயில்சாமி அண்ணாதுரை தமிழில் எழுதிய ஐந்து நூல்களான கையருகே நிலா,சிறகை விரிக்கும் மங்கள்யான்,வளரும் அறிவியல்,அறிவியல் களஞ்சியம்,விண்ணும் மண்ணும் போன்ற நூல்களைப்பற்றியும் ,தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார் .பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 11:00மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை VJ.கிருஷ்ணா தொகுத்து வழங்குகிறார் .