வொண்டர்லா கொச்சியில் அடி பொலிம்பிக்ஸ்: பிரீமியம் ரக 350 சிசி பைக், இ-சைக்கிள்கள் மற்றும் முழு ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் உட்பட பெரிய பரிசுகளுடன் கூடிய குதூகலமான மழைக்கால போட்டிகள் அறிமுகம்

இந்நிகழ்ச்சியை பிரபல மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைக்கிறார்

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா சங்கிலி-யான வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட், அதன் மழைக்கால சாம்பியன்ஷிப்பின் முதல் பதிப்பான வொண்டர்லா அடி பொலிம்பிக்ஸின்   தொடக்கத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அழகான மழைக்காலத்தில் கேளிக்கையான கேம் கான்செப்டுடன் பரபரப்பான மற்றும் வேடிக்கையான போட்டிகளுடன் போட்டியாளர்களுக்கு சவால் விடுகிறது வொண்டர்லா. இந்த விழாவை நடிகர் தியான் சீனிவாசன் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். வொண்டர்லா கொச்சியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இறுதிச் சுற்று வரை வேடிக்கையும் சாகசமும் தொடரும்.

போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி நுழைவு பூங்கா டிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. பருவமழைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பூங்கா டிக்கெட்டுகள் இப்போது சாதாரண பார்வையாளர்களுக்கு 20% தள்ளுபடியிலும், கல்லூரி மாணவர்களுக்கு முன்பதிவு செய்யும் போது 25% தள்ளுபடியிலும் கிடைக்கும். டிக்கெட் முன்பதிவுகள் 9 ஜூலை 2024 முதல் துவங்குகிறது. இந்த சாம்பியன்ஷிப் ஒவ்வொரு புதன், சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும். சாம்பியன்ஷிப் வெற்றியாளர்கள் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், இ-சைக்கிள்கள் முதல் 350சிசி பிரீமியம் பைக் வரை நம்பமுடியாத பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், முழுமையாக ஸ்பான்சர் செய்யப்பட்ட, சொகுசு ரிசார்ட்டில் தங்கும் வசதியுடன் கூடிய பயணத்தையும் வெல்ல வாய்ப்புள்ளது.

வொண்டர்லா அடிபொலிம்பிக்ஸ், மழைக்காலத்தில் குழந்தைபருவ கால மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வந்து, மழையை அனுபவித்து மகிழ்வதற்கான பல்வேறு தனிப்பட்ட மற்றும் குழு போட்டிகளைக் கொண்டிருக்கும். பங்கேற்பாளர்கள், உற்சாகமான நீர் சார்ந்த விளையாட்டான அக்வாமன் சவால், மெகா ஃபுடீ  சவால் மட்டும் குழு போட்டியான தடைகள் நிறைந்த வொண்டர்லா டெவில்ஸ் சர்க்யூட் போன்ற போட்டிகளை அடிபொலிம்பிக்ஸில் எதிர்கொள்ளலாம்.

இந்த கொண்டாட்டங்கள் குறித்து வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அருண் கே.சிட்டிலப்பிள்ளி பேசுகையில், “நம் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் பருவமழை காலம் எப்போதுமே சாகசமும், உற்சாகமும் நிறைந்ததாகவே இருந்தது. ஒவ்வொரு தண்ணீர் குட்டையையும் ஒரு புதிய சவாலாகவும், ஒவ்வொரு மழைத்துளியையும் மகிழ்ச்சியின் தருணங்களாகவும் மாற்றி, மழையைத் தழுவ நண்பர்களுடன் கூடியிருந்த தருணம் அது. வொண்டர்லா அடிபொலிம்பிக்ஸ் என்பது நமது இளமையின் கவலையற்ற நாட்களுக்கும், பருவமழை கொண்டு வரும் இணையில்லாத சந்தோஷங்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான மரியாதையாகும். இந்த முயற்சியை நாங்கள் தொடங்கும்போது, ​​அந்த இளமைகால நினைவுகள் மற்றும் தோழமை உணர்வை மீண்டும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டோம். அந்த மறக்க இயலாத பருவ காலத்தின் இனிய இன்பங்களை மீண்டும் அனுபவித்து, நினைவுகூறுவதில் எங்களுடன் சேர அனைத்து வயதினரையும் அழைக்கிறோம்.

வொண்டர்லா அடிபொலிம்பிக்ஸில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான நாளைக் கொண்டாட      அனைவரையும் வரவேற்கிறோம்.

வொண்டர்லா ஆன்லைன் போர்ட்டல் https://bookings.wonderla.com/ வழியாக பார்வையாளர்களை தங்கள் நுழைவு டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யலாம் அல்லது வாடிக்கையாளர்கள் நேரடியாக பூங்கா கவுண்டர்களில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது கொச்சி பூங்காவை 0484-3514001, 7593853107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.