5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 10 வயது சிறுவன்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ₹5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதியானது. தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து, குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.