விரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...

விரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...

விரைவில் நாடு முழுவதும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், " மாதத்தில் குறிப்பிட்ட ஒருநாளை தேர்வு செய்து, ஒவ்வொரு மாதமும் அந்த நாளிலேயே நாட்டில் உள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும்.

இது தொடர்பான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆர்வமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யவும், அனைத்து துறைகளிலும் ஒரேமாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது விரைவில் அமல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.