அமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு 2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான பொருளாதார ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியரான அபிஜித் பானர்ஜி, பொருளாதார அறிஞர் எஸ்தர் டூப்லோ ஆகியோர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.