நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு

நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு

பல்வேறு துறைகளின் செயல்பாடு அடிப்படையில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம் (5.40 புள்ளிகள்), 3வது இடத்தில் கர்நாடகம் (5.10 புள்ளிகள்) இடம்பிடித்துள்ளன.

18 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. அந்தப் பட்டியலில் பொது சுகாதாரத்தில் கேரளம்  முதல் இடம் பிடித்துள்ளது.

மத்திய அரசின் புள்ளி விவரப் பட்டியலில் நமது ஆண்டை மாநிலங்களான கர்நாடகத்துக்கு 3வது இடம், கேரளத்துக்கு 8வது இடம், தெலங்கானத்துக்கு 11வது இடமும் கிடைத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி, உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பொதுசுகாதாரத்தில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்திலும், சமூக நலனில் 7வது இடத்திலும் தமிழகம் உள்ளது.