KXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார் அஸ்வின்!

KXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார் அஸ்வின்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்வது ஒரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்வது தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இது இறுதியாக முடிவடைந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KXIP இணை உரிமையாளர் நெஸ் வாடியா முன்பு வதந்திகளை மறுத்திருந்தாலும், டெல்லி முதன்மை ஸ்பின்னரின் சேவைகளைப் பெற்றுள்ளது என்று கிடைக்கப்பெற்ற தகவல்கள் கூறுகின்றன.இதுகுறித்து டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையின் வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கின்றன.

முன்னதாக, IANS உடன் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குனர் அனில் கும்ப்ளே தெரிவிக்கையில், அஸ்வின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியிருந்தார், அவர் தான் இலக்கில் வந்துவிட்டதாகவும், வரிசைமாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள் குறித்து பேசுவது மிக விரைவில் திட்டமிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வின் தலைமையின் கீழ், KXIP கடந்த இரண்டு சீசன்களின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடியது. 2018-ல் ஏழாவது இடத்தையும், 2019-ல் ஆறாவது இடத்தையும் பிடித்தது. இதனால் அஸ்வினை கழற்றி விட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அடுத்த அத்தியாயத்தில் விளையாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நடவடிக்கை கே.எல். ராகுலுக்கு அடுத்த பதிப்பிற்கான கேப்டன் பொறுப்பை அளிக்க வழிவகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி அஸ்வீனுக்கு பதிலாக டெல்லி அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் போல்ட், சுசித் பஞ்சாப் அணிக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேலை அஸ்வீன் டெல்லி அணிக்கு சென்றால் அவருக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.7.6 கோடி தரப்படும் எனத் தெரிகிறது.