2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறும்!

2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறும்!

இந்த வருட ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் 57 நாள்களுக்கு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. வழக்கமாக 45 நாள்களில் நடக்கும் ஐபிஎல் இந்தமுறை 12 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளது.

மேலும், வார இறுதி நாள்களில் தினமும் இரு ஆட்டங்கள் நடைபெறுகிற நிலையில் இந்த ஆண்டு சனி, ஞாயிறில் தலா ஒரு ஆட்டம் மட்டும் தான் நடைபெறும் எனத் தெரிகிறது. மாலை நேர ஆட்டங்களுக்கு வருவதற்கு ரசிகர்கள் சிரமப்படுவதாலும் அந்த ஆட்டங்களுக்கு டிஆர்பி குறைவாக இருப்பதாலும் இந்தப் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் தொடரவுள்ளது. 

ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு வீரர்கள் சிலரால் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து டி20 போட்டி மார்ச் 29-ல் முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் மார்ச் 31 அன்று முடிவடைகிறது.

கடந்த வருட ஐபிஎல் போட்டியை மும்பை அணி வென்றதால், இறுதிச்சுற்று ஆட்டமும் மும்பையில் தான் நடைபெறும் எனத் தெரிகிறது.