ஆவடி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்!

ஆவடி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்!

2020ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸ் ஓபன் இன்டர்நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தனிநபர் குமிட் (யு-14, 30 கிலோ) பிரிவில், ஆவடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவி பி.சுபாஸ்ரீ, தம்முடன் போட்டியிட்ட மாணவியை எதிர்த்து 8-0 என்கிற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தேசிய அளவிலான இந்நிகழ்ச்சியை சுரேஷ் தற்காப்புக் கலை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி சென்னை வடபழனி, விஜயா ஃபோர்ம் மாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1300 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

பள்ளி நிர்வாகம் மாணவியின் அபாரச் சாதனையைப் பாராட்டி வாழ்த்துகிறது.