சென்னையில் நாளை விவசாயிகளுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த சட்டங்களுக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் குப்பையில் வீசப்படும் என்று என்று ராகுல் கூறியுள்ளார். ஆனால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். காங்கிரஸ் இடைத்தரகர்களுக்கு முகவர்களாக செயல்படுகிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

தமிழ்நாட்டிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை காலை சென்னை வருகிறார். அடையாறில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் சவேரா ஓட்டலில் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

அப்போது வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நிலவும் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளிக்க உள்ளார்.